2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின், இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஐபிஎல் தொடங்கியது முதலே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தனி ஆவர்த்தனம் செலுத்தி வருகிறது. கடந்த 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதுபோல, மும்பை இந்தியன்ஸ் அணி, 2013, 2015, 2017 ஆகிய மூன்று சீசன்களிலும் கோப்பையை வென்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் சிஎஸ்கேவுக்கும் மும்பை அணிக்கும் இடையே போட்டி நடை பெற உள்ளது. கோப்பையை வெல்லப்போது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த தொடரின்போது சிஎஸ்கே மும்பையுடன் ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி யடைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தகுதிச்சுற்றிலும், மும்பை யிடம் மீண்டும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நேற்று டெல்லி கேப்பிட்டல் அணியை சந்திக்க வேண்டிய சூழல் சிஎஸ்கே அணிக்கு உருவானது.
அதுபோல மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 3 ஐபிஎல் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில், 2 தடவை சிஎஸ்கே அணியை தோற்கடித்து, இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் மீண்டும் மும்பையை சந்திக்க உள்ளது. .
நான்காவது முறையாக சென்னை சூப்பர்கிங்ஸ் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்ளும், கோப்பையை வெல்லப்போது யார் என்பது குறித்து, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிகாறர்கள்… நாளை இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.