சென்னை
இந்த வருட ஐ பி எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி டெத் ஓவர்களில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களின் முடிவில் ஆல் அவுட் ஆனது. எனவே பஞ்சாப் அணிக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக 82 ரன்களும், டெவால்டு பிரெவிஸ் 32 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் யுவேந்திர சஹல் 4 விக்கெட்டுகளும், மார்கோ சான்சென், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ப்தீப், உமர்சாய் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
அடுத்து 191 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் 19.4 ஓவர்களிலேயே 194 ரன்கள் குவித்தது வெற்றிப் பெற்றது. பஞ்சாப் தரப்பில் ஸ்ரேயாஸ் அதிகபட்சமாக 72 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்களும் அடித்தனர். சென்னை தரப்பில் கலீல் அஹமத், பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, நூர் அஹமத் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது, இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்த்தை அளித்துள்ளது.