சென்னை
தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த பிரபல கணித மேதை சி எஸ் சேஷாத்திரியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1932 ஆம் ஆண்டு பிறந்த சி எல் சேஷாத்திரியின் முழுப் பெயர் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி ஆகும். இவர் செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பி ஏ ஆனர்ஸ் பட்டம் பெற்றார் அதன் பிறகு மும்பை டாடா ஆய்வகத்தில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், கலிபோர்னியா உள்ளிட்ட ஏராளமான பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர் பணி புரிந்தார்.
சேஷாத்திரியைப் பாராட்டி அமெரிக்கக் கணித கழகம், பாரிஸ் பியரி பல்கலைக்கழகம் உள்ளிட்டவை விருது அளித்துள்ளன. இதைத் தவிர பத்மபூஷன், சாந்தி ஸ்வ்ரூப் ப்ட்நாக்ர், இந்திய அறிவியல் அகாடமியின் ஸ்ரீனிவாச ராமானுஜம் விருது, பனாரஸ் இந்தி பல்கலைக்கழக விருது எனப் பல விருதுகளை சேஷாத்திரி பெற்றுள்ளார். இவர் அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர் ஆவார்.
சென்னை கணிதவியல் கழகம் தொடங்க காரணமாக இருந்த சேஷாத்திரி அங்கு இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். இவர் இயற்கணித வடிவில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளார். தற்போது 88 வயதாகும் சேஷாத்திரி முதுமை காரணமாகக் காலமானார். இவருடைய மறைவு கணித உலகத்துக்கு நேர்ந்துள்ள மாபெரும் இழப்பு எனப் பலரும் புகழஞ்சலி சூட்டி வருகின்றனர்.