புதுடெல்லி:
வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்ககூடாது என சட்டத்தை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வங்கிகள் இனி தாராளமாக அதை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ கார்டு, எச்டிஎப்சி வங்கி ஆகியன கிரிப்டோகரன்சிகளை அனுமதிக்க மாட்டோம் என தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்திய நிலையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சியை ஊக்குவித்தால், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவை உருவாகும் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது 100 சதவிகிதம் சட்டபூர்வமானது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.