டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 7வது கட்ட பேச்சு நடத்த இருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், இன்றைய பேச்சுவார்த்தை நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும்  திரும்பப்பெறக் கோரி விவசாயிகள்  டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 40வது நாளாக தொடர்கிறது. இதுவரை பல விவசாயிகள் குளிர் தாங்காமல் மரணத்தை தழுவி உள்ள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில  7வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக உடன்பாடு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையின்போது,  3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில்  வேளாண் சங்கங்கள் உறுதியாக உள்ளன. மேலும்,    குறைந்தபட்ச ஆதரவு விலை  சட்ட ரீதியான அந்தஸ்து கிடைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கருதுகின்றனர். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியாக அணுகுவது குறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.  இன்றைய பேச்சுவார்த்தையில்  ஒருவேளை உடன்பாடு ஏற்பட்விட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற 6வது கட்ட  பேச்சு வார்த்தையில்,  “மின்சார அவசரச் சட்ட மசோதாவை நிறுத்திவைப்பது, வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது  ஆகிய  2 கோரிக்கைகள்  ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இவ்வாறு அவர் கூறினார்.