
சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லி மையத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வருகிறார். இன்று மையத்தில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
வேலை நேரத்தின் போது ராஜேஷ்குமார் செல்போனில் பேசியதாகவும், இதனால் அவருக்கு உயரதிகாரிகள் தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த ராஜேஷ்குமார் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Patrikai.com official YouTube Channel