பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட சிலர் உயிருக்கு ஆபதான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பிரயாக்ராஜில் நடந்த “மகா கும்பமேளா” 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பல் கோடி பேர் பிரக்யாராஜ் சென்று, அங்குள்ள கங்கை நதியில் நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இந்த ஆண்டு முதல் 35 கோடி மக்கள் முதல் 40 வரை மக்கள் வரை கும்ப மேளாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை 10கோடிக்கும் மேலானோர் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று தை அமாவாசையையொட்டி, அதிகாலை முதலே கும்பமேளாவில் நீராட பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களை சீராக சென்று வர பல்வேறு நடவடிக்கைகளை யோகி அரசு மேற்கொண்டுள்ள நிலையில், கூட்ட நெரிசல் காரணமகா ஒரு இடத்தில் தடுப்புகள் உடைந்து மக்கள் வீழே விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கு நடைபெற்றுள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த தடுப்பு உடைந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட மேளா ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், காயம் அடைந்தவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை பொறுப்பு அதிகாரி அகான்ஷா ரானா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்.
இதற்கிடையில் சில ஊடகங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கிக்ன.றன. நெரிசலை அடுத்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில், உடல்கள் ஸ்ட்ரெச்சர்களில் எடுத்துச் செல்லப்படுவதையும், தரையில் அமர்ந்திருந்த மக்கள் அழுவதையும், மற்றவர்கள் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றபோது மக்கள் விட்டுச் சென்ற கைவிடப்பட்ட ஆடைகள், காலணிகள், முதுகுப்பைகள் மற்றும் போர்வைகள் சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த ஆற்றங்கரையை நோக்கி விரைந்து வந்த டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்களைப் பின்தொடர்ந்து பல இறந்த உடல்களைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த கூட்ட நெரிசலில் ஏழுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்” என்று ஊடகங்களுடன் பேச அதிகாரம் இல்லாததால் பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.