குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்திக்குப் பதிலாக அனுபம் கெர் படத்துடன் கூடிய ரூ.1.60 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அகமதாபாத் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஆன்லைன் ஆடை விற்பனை வணிகம் என்ற போர்வையில் சூரத் நகரின் வணிக வளாகத்தில் செய்யப்பட்டு வந்த இந்த போலி ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து ரூ. 1.60 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கள்ளநோட்டுகளில் மகாத்மா காந்தி படத்திற்குப் பதிலாக அனுபம் கெர் படம் அச்சிடப்பட்டிருந்ததாகவும் அதில் ‘ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘ரிசோல் பேங்க் ஆப் இந்தியா’ என்று அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அனுபம் கெர் படத்துடன் கூடிய இந்த போலி ரூ. 500 நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளநோட்டுக்களை அச்சடித்த நான்கு பேரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளதை அடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.