சென்னை: மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து முதலமைச்சர் அமைத்த,  ஐ.பெரியசாமி தலைமை யிலான  அமைச்சர்கள் குழுவினர், அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த நிலையில், அதன் அறிக்கையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் இன்று சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்களுடன் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிற்ன.  கடந்த 11-ஆம் தேதி அன்று சென்னை உள்பட  டெல்டா மாவட்டங்களில் பெண்த  கனமழையின் காரணமாக, ஏரி குளங்கள் நிரம்பி, மழை வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்காக காத்திருந்த பயிர்களும் மழைநீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பயிர்கள் மழை நீரில் மூழ்கிய பயிர்களை  காப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பயிர் சேத விவரங்களை அறியவும், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து, அறிக்கை மசர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த குழுவினர்,  பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதையடுத்து, பயிர்சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த அமைச்சர்கள் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.