சென்னை; பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே வடலூர் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது ராணிப்பேட்டை போலீசார சம்மன் அனுப்பி உள்ளனர்.

பெரியார் குறித்து விமர்சனம் செய்து வரும் சீமான் மீது மாநிலம் முழுவதும் திமுகவினர் மற்றும் திகவினர் தரப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட புகாரகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு, சீமானை திமுக அரசு கைது செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஆட்டத்தை ஸ்டாலின் அரசு தொடங்கி உள்ளது.
சீமானின் அரசியல் பயணத்தை முடக்கும் நோக்கில், ஏற்கனவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தனது கட்சிக்க இழுத்துள்ள திமுக, தற்போது காவல்துறையை கொண்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுத்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை திமுகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சீமானுக்கு காவல்துறையினர் அடுத்தடுத்து சம்மன் அனுப்ப தொடங்கி உள்ளனர்.
தற்போது, பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பவானி சாலையில் ரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை வீசினால், உங்களை புதைக்கும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது, என்றும் பேசி இருந்தார் . மேலும் இனப்பற்று வேண்டாம், இனவெறி கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம் மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, வருகிற 20 ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீமான் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, விக்கிரவாண்டி, சேலம் ஆகிய இடங்களிலும் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் எனவும் ஒவ்வொரு இடத்திற்கும் ஆஜராவதாக தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் சம்மன் அனுப்பினால் ஒரு ஆள் தான் இருப்பதாக கூறியுள்ளார் .ஏஐ மூலமாக மூன்று நான்கு பேரை உருவாக்கி அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஒரே நீதிமன்றத்தில் ஒரே விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]