சென்னை : 
மிழக முதல்வர் ஜெயலலிதா தலைலமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 பேரில் 9 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அவர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த விவரம் வந்துள்ளது.
9 பேரில், 4 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபட்டது, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. download
பால் வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் தங்களது பிரமாணப் பத்திரத்தில், தங்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல, முதல்வர் ஜெயலலிதா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகன்டன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மற்றும் ரெட்டி ஆகியோர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 4 பேரின் சுய விவரம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.