சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும்,  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று  புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இதுகுறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது, நாளுக்கு நாள் போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக சாடிய நிலையில், திமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.,

இந்த நிலையில்,  அதிகாரிகள் தரவு தவறு; திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என புள்ளி விவரங்களுடன் பாமக தலைவர்  அன்புமணி அதுகுறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும்  சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், அதுகுறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2021 – தமிழ்நாடு கொலை புள்ளிவிவரம் (NCRB)

மொத்தம் கொலை: 1,741
ஆண்கள்: 1,288
பெண்கள்: 452
திருநங்கையர்: 1

18 வயதுக்கு மேல்: 1,672
குழந்தைகள்: 69

அதிகாரிகள் கூறிய எண்ணிக்கை: 1,597

வித்தியாசம்: 144 கொலைகள்

குறைந்து காட்டப்பட்டது: 8.27%

கொலைகள் – ஆட்சிக் கால ஒப்பீட்டு புள்ளிவிவரம்

2021 – திமுக ஆட்சியின் முதல் ஆண்டு

கொலைகள்: 1,741

2016 (அதிமுக முதல் ஆண்டு): 1,683

அதிகரிப்பு: 58 (3.44%)

2022 – திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு

கொலைகள்: 1,756

2017 (அதிமுக இரண்டாம் ஆண்டு): 1,613

அதிகரிப்பு: 143 (8.86%)

2023 – திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டு

கொலைகள்: 1,742

2018 (அதிமுக மூன்றாம் ஆண்டு): 1,631

அதிகரிப்பு: 111 (6.80%)

குழந்தைகளுக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்ட (IPC) குற்றங்கள்

2020 – 4,338

2021 – 6,064

2022 – 6,580

2023 – 6,968

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2,630 (60.62%) அதிகரித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

போக்சோ (POCSO) சட்ட வழக்குகள்

2020 – 3,057

2021 – 4,415

2022 – 4,906

2023 – 4,581

2024 – 6,975

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 3,818 வழக்குகள் (124.89%) அதிகரித்துள்ளது.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

[youtube-feed feed=1]