யுவராஜ்சிங் - கஷல்கீச்
யுவராஜ்சிங் – ஹாஷல்கீச்

சண்டிகர்,
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் இன்று நடைபெறுகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஆனால் விதியின் விளையாட்டு, அவருக்கு புற்றுநோய் தாக்கியது. ஆனாலும் அவர் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் வெளிநாடு அதற்கான சிகிசிசை எடுத்து, புற்றுநோய்வை வெற்றிகண்டு, மீண்டும்  உடல் நலம், பலம்  நிருபித்து கிரிக்கெட்டில் டீமில் இடம் பிடித்து களம் இறங்கினார்.
இந்நிலையில், யுவராஜ் சிங் அவரது காதலியான மாடல் அழகி ஹாசல் கீச்சை இன்று கரம் பிடிக்கிறார்.
யுவராஜ்சிங்கிற்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் சில வருடங்களாகவே காதலித்து வருகின்றனர். அதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமண விருந்தில் சக வீரர்கள்
திருமண விருந்தில் சக வீரர்கள்

இந்த நிலையில், இவர்களது திருமணம் இன்று பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள பதேகர் சாகிப்பில் நடைபெற உள்ளது.
இதற்காக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை யுவராஜ் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.