கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷமி மீது அவரது மனைவி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, தன்னை அவமானப்படுத்தியது ஆகிய புகார்களுடன் தன்னைக் கொல்ல முயன்றதாகவும் புகார் கூறியிருந்தார்.
பல பெண்களுடன் ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மனைவி, அவர் மீது புகார் அளித்து இருந்தார்.
கொல்கத்தா குற்ற பிரிவு ஜாயிண்ட் கமிஷ்னர் பிரவின் திரிப்பதியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்று ஷமி மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. பிரிவு 307 கொலை முயற்சி) 498 எ (மனைவியை கொடுமைப்படுத்துதல்), 506 (கிரிமினல் குற்றம்), 328 (விஷம் கொடுத்து, தாக்குதல்), 34 (பலருடன் சேர்ந்து கொலை முயற்சி செய்தல்), 376 (வன்புணர்வு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
ஷமி 10 வருடம் வரை சிறைத்தண்டனை பெற நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.