கொழும்பு:
இலங்கை கண்டி மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனனர். பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு பல நாட்டினரும், முக்கிய பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் குமார சங்கக்கரா, மகேல ஜெயர்வர்த்தனே ஆகியோர் சிறுபான்மையினர் மீதான இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.
சங்கக்கரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘மதம் அல்லது இனம் அடிப்படையில் ஒருவரை இலக்காக நிர்ணயம் செய்து செயல்படுவது நியாயமற்றது. இதன் அடிப்படையில் யார் மீது வெறுப்பை காட்டுவதோ? அல்லது அச்சுறுத்துவதோ கூடாது.
நாம் அனைவரும் ஒரே நாடு. ஒரே மக்கள். அன்பு, நம்பிக்கை, ஏற்பு ஆகியவை தான் நமது பொதுவான தாரக மந்திரம். இனவெறி மற்றும் வன்முறைக்கு இடமளிக்க கூடாது. இதை நிறுத்த வேண்டும். அனைவரும் இணைந்து அழுத்தமாக நிற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் மெகலே ஜெயவர்த்தனே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்ட அனைவரும் மதம், இன வேறுபாடின்றி நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். 25 ஆண்டுகள் நீடித்த ஒரு போர் மூலம் நான் வளர்ந்தேன். அடுத்த த¬முறையும் அது போன்று ஒரு பாதையில் பயணிக்க வேண்டாம்’’ என்றார்.
இதேபோல் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஆல்ரவுண்டர் ஆங்கிலோ மேத்யூ ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.