credai-india-logo
ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைமை மையமான CREDAI ” விலைக்குறைப்பு சாத்தியமில்லை. இதற்கு மேல் விலைகுறைப்பு செய்தால் முதலீடு செய்த தொகையை ஈட்ட முடியாது. இதன்  மூலம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் உரிய பலங்களைத் தராது என்றும் கூறியுள்ளது.
நேற்று, ரகுராம் ராஜன், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், மக்கள் வீடுகளை வாங்குவதற்கு ஊக்கப்படுத்துவதற்கு ஏற்றவாறு விலையினை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
raghuram rajan
நாட்டில் உள்ள ரியல் எஸ்டேட் பங்குகளில் 90% பங்குகள், ஏற்கனவே 20-30 சதவித விலைகுறைப்பை செய்துவிட்டன. இனியும் விலைக்குறைப்பு செய்வது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் ரியல் எஸ்டேட் திட்டங்கள் நஷ்டத்தில் முடிந்துவிடும்.
தேசிய CREDAI தலைவர் கீதாம்பெர் ஆனந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி கவர்னரின் பேச்சினை தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது. அவர் விலையினை மாற்றி அமைக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளாரே தவிர விலைக்குறைப்பு செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கவில்லை. இந்த மாற்றம், மக்களை கவரும் வகையில் கடன் திட்டங்களை மாற்றியமைத்தல் ஆகும். உதாரணத்திற்கு, எளிதான மாதத் தவணை, வங்கிகடன் வசதிக்கு உதவுதல் போன்றவையாகவும் இருக்கலாம். இதன் மூலம் மேலும் சில வாடிக்கையாளர்கள் வீடு வாங்குவார்கள்.

ரியல் எஸ்டேட் வர்த்தகம் இந்தியாவில் சமீபக் காலத்தில் குறைந்து வருகின்றது. இதன் விளைவாக, பல கட்டிமுடிக்கப் பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்கப்படாமலும், பல ரியல் எஸ்டேட் திட்டங்கள் முடிக்கப் படாமலும் நிலுவையில் உள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

99 ஏக்கர் கம்பெனியின் முதலாளி , நரசிம்மன் ஜெயக்குமார் ” புது தில்லியில், சென்றக் காலாண்டை(அக்டொபர்- டிசம்பர்), இந்த நிதிக் காலாண்டில்(ஜனவரி-மார்ச்) , மனைகளின் விலை சதுர அடிக்கு 1% வரை விலை குறைந்துள்ளது என்றார்.