கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, சாலையில் அவர் பின்னர் வந்துகொண்டிருந்த  கார்களில்மீது பட்டாசு விழுந்தது. இதில் 2 கார்கள் எரிந்து நாசமானது.

4ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று 100க்கும் மேற்பட்ட கார்களுடன்  தமிழகம் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு அமமுகவினர் ஆங்காங்கே நின்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அவரது கார்  கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி டோல்கோட் அருகே வந்தது,அவரை  அமமுகவினர் ச வரவேற்க பட்டாசுகள் வெடித்தனர். ஏராளமான பட்டாசுகள் வெடித்து சிதறியதால், 2 கார்கள் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சசிகலா வருகையின்போது, பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை  உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்தும்,அதை மீறி சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்து ஆர்ப்பாட்டமாக வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,   வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும் என்றும் போலீசார் 6 தடை உத்தரவுகளை பிறப்பித்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

[youtube-feed feed=1]