இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தத பிறகு,  ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்த விளம்பரங்கள் அதிகமாகி விட்டன.

மிருகவதையை தடுக்கும் நோக்கத்தோடு இந்தியா முழுவதும் இனி இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என தடை விதிப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது.

“மக்களின் உணவுப் பழக்கங்கள் மீதான தாக்குதல் இது” என்றும், “ மத ரீதியான தாக்குதல் இது” என்றும்,  மத்திய பாஜக அரசு மீது , பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கால்நடைகளை விற்பவர்கள்,  டிஜிட்டல் இந்தியா முறையில்  மாடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.

ஓ.எல்.எக்ஸ்.  போன்ற ஆன்லைன் சந்தைகளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கணக்கான மாடுகள் வரை,  விற்பனைக்காக என்று விளம்பரங்கள் வெளிவருகின்றன.

ஓ.எல்.எக்ஸ், க்விக்கர் போன்ற ஆன்லைன் சந்தைகளில்  ஏற்கனவே  கால்நடைகள் விற்பனை இருந்தாலும்  மத்திய அரசின் இந்தத் தடைக்கு பிறகு இத்தகைய ஆன்லைன் விளம்பரங்கள் பெருகி  உள்ளன.