டிகர் கருணாஸ் கொரோனா தொற்று பாதித்ததால் திண்டுக் கல்லில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.


இதுகுறித்து கருணாஸ் மகன் கென் வெளியிட்ட தகவலில்,’ நீங்கள் அனை வரும் அறிந்திருப்பீர்கள் என் தந்தைக்கு கொரோனா பாஸிட்டிவாக உள்ளது. அவர் ஒரு அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சேவையாளர் என்பதால் அவர் கடந்த நாட்களில் தனது தொகுதி மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்தார். இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள் ளார். அவரது உடல்நிலை நிலையாக உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என கூறி உள்ளார்.
கருணாஸ் மகன் கென் தனுஷ நடிக்க வெற்றி மாறன் இயக்கிய ’அசுரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கி றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]