புனே: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இதன் காரணமாக கோவிஷில்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 187 கோடியே 46லட்சத்துக்கு 536 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், 18,03,558 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இருந்தாலும் இன்னும் பலகோடி பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில், முதல்டோஸ் எடுத்துக்கொண்ட பெரும்பாலோர் 2வது டோஸ் எடுக்க முன்வரவது இல்லை என்றும் கூறப்படுகிறது. தடுப்பூசி எடுத்துக்கொள்வதை கட்டாயமாக்கப் முடியாது என்பதால், பொதுமக்களின் நலனுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் தேங்கி உள்ளனது. தடுப்பூசியின் ஆயுட்காலம் 9 மாதங்கள் மட்டுமே என்பதால், தடுப்பூசி தயாரிப்பதை சீரம் நிறுவனம் நிறுத்தி விட்டதாக தெரிவத்து உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படாமல் கையிருப்பில் உள்ளதாக கூறி கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தபோது, தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது . இதனால் விற்பனையாகாத தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் கையிருப்பில் உள்ளது. 20 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்துள்ளோம் .அது காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.