கொழும்பு:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இலங்கையிலும் தனது கைவரிசையை காட்டி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் ஊரடங்கும் போடப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று  உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறி வெளியில் நடமாடுபவர்களை, அந்நாட்டு காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர்…இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அங்கு சாலைகளில் சுற்றி திரிந்தவர்கள், காவல்துறையினர் வாகனங்களைக் கண்டதும், அருகிலுள்ள பூங்காக்குள் நுழைய, விரட்டிச் சென்று அவர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்…

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.