இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

லண்டன்:

ங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் புதிய வகை கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 357- பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,329,730- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71,109- ஆக உள்ளது.

More articles

Latest article