சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று நான்காயிரத்து 538 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனா பாதித்தவர்களில் 79 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 75 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் மூன்றாயிரத்து 391 பேர் நோய் தொற்றில் இருந்து நலம் பெற்றதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை 47 ஆயிரத்து 782 பேர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 98 ஆயிரத்து 63 ஆண்களும், 62 ஆயிரத்து 821 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]