கவுகாத்தி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அஸ்ஸாம் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏ ற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது வெளிநாடுகளின் தடுப்பூசிகளுக்கு இறக்குமதி செய்யும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது.
இநத் நிலையில், கடந்த 6ந்தேதியுடன் தேர்தல் முடிவடைந்த அசாம் மாநிலத்தில், தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், அங்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுவதால் எழுந்துள்ள அச்சம் காரணமாக அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால், 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பது இருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும், தற்போது 2வது டோஸ் தடுப்பூசி போடுவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் திரண்டு வருவதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை முதல் டோஸுக்கு வரும் எவருக்கும் தடுப்பூசி வழங்குவதை நிறுத்துமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அரசு, இன்று மேலும் தடுப்பு மருந்துகள் மாநிலத்துக்கு வர உள்ளதாகவும், அது கிடைத்தவுடன் பற்றாக்குறை சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.