டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் பரவிய நிலையில், தற்போது ஜனவரி 16ந்தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, வரும் 16ந்தேதி (ஜனவரி, 2021) முதல் நாடு முழுவதும் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைக்காக, 2கட்ட ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
இதையடுதது, வரும் 16ந்தேதி நாடு முழுவதும தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி மருந்துக்கள் வினியோகப்பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திட்டமிட்ட நாளை விட 2 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், அதில், சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.