சென்னை: ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட தலா 100 படுக்கைள் கொண்ட கோவிட் வார்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் (இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கம்) சார்பில், அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக  இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கமான தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,   அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன், தலா 100 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் தலா 50 படுக்கைகள் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையத்தை கடந்த 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தற்காலிக சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு அம்மையம் வழங்கப்பட உள்ளது. ங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், சக்கர நாற்காலிகள், நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கான சக்கர படுக்கை ஆகியவையும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.

இஎஸ்ஐ மருத்துவமனை கேட்டுக்கொண்டதன் பேரில், உடனடியாக 5 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசுஓமந்தூரார் மருத்துவமனைக்கு 50 சக்கர நாற்காலிகள் மற்றும் 100 சக்கர படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.