புதுடெல்லி:

ந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில் பாதி அளவு மட்டும் வரும் மே மாதத்தில் காலவாதியாக உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்ள மூத்த குடிமக்கள் காத்திருக்கும் நிலையில், விலைமதிப்பற்ற கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகி வீணாகி விடும் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, 35 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, அதில் பெரிய இடைவெளி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பேசிய உ.பி., பிஜ்னோர், மங்லா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் குழந்தை மருத்துவர் டாக்டர் விபின் எம். வசிஷ்டா தெரிவிக்கையில், “ஏராளமான தடுப்பூசி கிடைத்தாலும் தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் நாங்கள் பின்தங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்ட தடுப்பூசி போடும் பணிகள் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இருப்பினும், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் பட்டியலில் இடம் பெற்ற பெயர் பட்டியலிலும் குழப்பம் நிலவி வருகிறது.

மகாராஷ்டிராவில் சுமார் 43% சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் முதல் அளவு போடப்பட்டுள்ளது. இந்த ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதே நேரத்தில், தமிழகம் 12.3 லட்சம் தடுப்பூசி பெற்றிருந்தாலும், 3.2 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில், பெறப்பட்ட 17.1 லட்சம் தடுப்பூசிகளில், 5.8 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் வசிஷ்டா தெரிவிக்கையில், “தற்போதைய தேசிய அளவிலான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அவரசம் இல்லாமல், பொறுமையாக செய்ய வேண்டியுள்ளது என்றும்,
முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தனியார் துறை தயாரித்த தடுப்பூசி பயன்படுத்தப்படுத்துவதையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.