டெல்லி: கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.250க்கு விற்பனை செய்யப்படும் என நம்புவதாக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் 90 சதவிகிதம் வெற்றியளித்துள்ளதாக அறிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தங்களது தடுப்பூசியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க அனுமதி கோரி மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்த நிலையில், தங்களது நிறுவனத்தின் தடுப்பூசி , இந்தியாவில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் விற்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து கூறிய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, ஒரு டோஸ் தடுப்பு மருந்து ரூ.1000 என்ற விலையில் விற்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், சீரம் நிறுவனத்துடன் இந்திய அரசு மிகப்பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்திய சந்தையில், ஒரு டோஸ் தடுப்பு மருந்து ரூ.250-க்கு இந்திய சந்தையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி முதன்முதலாக இந்தியாவுக்கே விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகே மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.