அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

Must read

வாஷிங்டன்:

கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்.

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்திய-அமெரிக்கர்களை சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article