டெல்லி:

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க மருத்து வருகின்றன. சிகிச்சை அளிக்கும் சில மருத்துவ மனைகளும் அதிக அளவிலான கட்டணம் வசூலித்து வருகிறது.

இதை ஒழுங்குபடுத்தும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் அபிசேக் சிங்வி என்பவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.  அவரது மனுவில், கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள் மூலம் தனிமைப்படுத்தும் இடங்கள், சிகிச்சையை கட்டண அடிப்படையில் தொடங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சைஅளிக்க கட்டண நிர்ணயம் செய்ய மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் தெரிவித்திருந்தார்

இந்த மனு மீதான விசாரணை இன்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது,  மருத்துவமனை கூட்டமைப்பு தரப்பில் ஹரிஸ் சால்வே, முகுல் ரோத்தகியும், மத்திய அரசு தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், ‘ இந்த பொதுநலன் மனுவில் கேட்டுள்ளபடி கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய கட்டணத்தை மத்தியஅரசு நிர்ணயிப்பது தொடர்பாக பதிலை அடுத்த 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும்,

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு கண்டிப்பாக இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளும் தங்களின் பதிலை விரிவாக இருவாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.