சென்னை: சென்னை குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. இந்தியாவிலும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தமிழகஅரசும், சுகாதாரத்துறையினரும், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும், பலர், அரசின் அறிவிப்பு களையும், வேண்டுகோளையும் மதிக்காமல் சுற்றி வருகின்றனர். தளர்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் மாஸ்க் அணியாமல் இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வரம்பில் வசிக்கும் மக்கள் வாய் மற்றும் மூக்கு இரண்டையும் உள்ளடக்கிய மாஸ்க் அணிகிறார்களா என்பது குறித்து தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வானது அக்டோபர் 16 முதல் 19 வரை 60 குயிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்டது. (குடிசை மாற்று வாரிய பகுதி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள்) அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வயதினரையும் சேர்ந்த 3600 நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில், ஒரு நாளைக்கு இருமுறை வெளியே சுற்றி வருவதை தெரிய வந்தது. அவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலேயே நடமாடியதாக கூறப்பட்டுள்ளது.
குடிசை பகுதிகளைக் குடியிருப்பு பகுதிகளில் 56 சதவிகித மக்கள் முகமூடி அணியவில்லை.
மற்ற குடியிருப்பு பகுதிகளில் 43 சதவீதம் பேர் முகமூடி அணியவில்லை.
குடிசைகள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 28 சதவீத மக்கள் மட்டுமே முகமூடிகளை சரியாக அணிந்திருந்தனர்.
மற்ற குடியிருப்பு பகுதிகளில் 36 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் சரியாக அணிந்திருந்தனர்.
குடிசை பகுதிகளைக்கொண்ட குடியிருப்பு பகுதிகளில் 16 சதவீத மக்கள் மாஸ்க் சரியாக அணியவில்லை.
மற்ற குடியிருப்பு பகுதிகளில் 21 சதவீதம் மாஸ்க் அணியவில்லை.
வடக்கு மற்றும் மத்திய சென்னை மண்டலங்களின் குடிசைப்பகுதிகள் அல்லாத சாதாரண குடியிருப்பு பகுதிகளில், சரியானபடி முகமூடி அணியாதது அதிகமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் தெற்கு சென்னை மண்டலங்களின் பகுதிகளில், குடிசை குடியிருப்புகள் அல்லாத பகுதிகளில் அதிகமான மக்கள் முகமூடிகளை சரியாக அணிந்திருந்ததாகவும் தெரிவித்துஉள்ளது.
மொத்ததில், வடக்கு சென்னை குடிசைப் பகுதிகளில் 77 சதவிகித மக்கள் முகமூடிகளை சரியாக அணியவில்லை, மத்தியசென்னை குடிசைப்பகுதிகளில் 69 சதவீதமும், தெற்கு சென்னை குடிசைப் பகுதிகளில், 71 சதவீதமும் சரியான முறையில் மாஸ்க் அணியவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த ஆய்வுகள் குறித்து கருத்து தெரிவித்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர், நகர மக்களிடையே மாஸ்க் அணிவது குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்ததுடன், ஒட்டுமொத்தமாக நகரத்தில் மாஸ்க் அணியும் விவகாரம் மோசமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்தவர், “முகமூடி அணியும்போது வாய் மற்றும் மூக்கு மறைக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் முகமூடிகளை சரியாக அணியாதது கவலையை தெரிவிப்பதாக கூறியவர், இதுபோன்ற நடவடிக்கைகள், கொரோனா தொற்று பரவலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறியவர், நாட்டில், “தொற்றுநோய் இன்னும் முடியவில்லை என்று கூறியவர், பொதுமக்கள் பண்டிகை காலத்தை பாதுகாப்பான கொண்டாட வேண்டும், கட்டாயம் முகமூடி அணிய வேண்டும்என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொண்டிருக்க வேண்டும், அவர்கள் முகமூடிகளை மட்டுமே வாங்க வேண்டும், ” என்று டாக்டர் கவுர் கூறினார்.