ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிலியில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், கொரோனா வைரஸ் உலகின் 7 கண்டங்களையும் ஆக்கிரமித்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா தொற்று, உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ள. தொடக்கத்தில் ஆசிய கண்டத்தை ஆக்கிரமித்த கொரோனா தொடர்ந்து, ஐரோபா, ஆமெரிக்கா, ஓசியானியா, ஆப்பிரிகா என பரவியது. தற்போது சிலி ஆராய்ச்சி நிலையம் வழியாக அண்டார்டிகாவையும் அடைந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது..
இதன் காரணமாக உலகின் அனைத்து கண்டங்களையும் கொரோனா வைரஸ் சுற்றி வளைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. அண்டாட்டிகாவின் கடற்படைககு சொந்த இரண்டு இராணுவ கப்பலில் உள்ள வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று வந்ததாகவும், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாடு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய சிலியின் ராணுவ ஜெனரல் பெர்னார்டோ ஓ’ஹிகின்ஸ் ரிக்கெல்ம், அண்டார்டிக் தளத்தில் 36 பேர் நேர்மறை சோதனை செய்ததாக டிசம்பர் 21 அன்று, அறிவித்தார். அவர்களில், 26 உறுப்பினர்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், 10 பேர் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்தின் சிவில் ஊழியர்கள் என்று கூறப்பட்டது.
கடந்த வாரம், சார்ஜென்ட் ஆல்டியா கப்பலில் இருந்த மூன்று பேருக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர், அனைத்து 208 பணியாளர்களும் அந்தக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 வரை டிரினிட்டி தீபகற்பத்தின் தளத்திற்கு சேவை செய்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை, அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க திட்டங்களை மேற்பார்வையிடும் நிறுவனம், சார்ஜென்ட் ஆல்டியாவில் உள்ள பயணிகளில் நேர்மறையான வழக்குகள் பற்றிய அறிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாக தெரிவித்துஉள்ளது.
இதுவரை அண்டார்டிகாவில் உள்ள வேறு எந்த நாடும் COVID-19 இன் வேறு எந்த நிகழ்வுகளையும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போதுதான் முதன்முறையாக தொற்று பாதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் உலகின் 7 கண்டங்களையும் ஆக்கிரமித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.