இங்கிலாந்தில் இருந்து மும்பை வந்த 590 பயணிகளில் 15 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ்…

Must read

மும்பை: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய பரிணாம வைரஸ் உலக நாடுகளை மீண்டும் பிதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று இங்கிலாந்தில் இருந்து மும்பை விமான பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருக்கு புதிய வகையிலான கொரோனா  தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கட்டாயப் PCR சோதனை செய்யப்பட்ட்டு வருகிறது. டெல்லி, அமிர்தசரஸ், கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நேற்று நள்ளிரவில் லண்டனில் இருந்து 3 விமானங்களில் மும்பை வந்தவர்களுக்கும் சோதனை கட்டாயமாக்கப்பட்டது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மட்டும் மும்பைக்கு  மூன்று விமானங்கள் மூலம் 590 பயணிகள் மும்பையில் தரையிறங்கி உள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில்,  15 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் உள்ளிட்ட சில சிறந்த பரிந்துரை நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன என  மத்திய அரசின் மூத்த அதிகாரி  தெரிவித்து உள்ளார்.

விமானத்தில் தரையிறங்கிய 590 பயணிகளில், 299 பேர் நகரத்திற்குள் உள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,  590 பயணிகளில் 187 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 167 பேர் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 236 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறிய  கிரேட்டர் மும்பை நகராட்சி ஆணையர் ஐ.எஸ்.சஹால்   இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக ஏழு நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஏதேனும் அறிகுறிகள் உள்ளவர்கள் செவன்ஹில்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

புதிய வைரஸ் தொற்று காரணமாக, இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு திரும்ப மற்றும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பரிதவித்து வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article