டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், இன்னும் 3 மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதிலும் சிக்கல் உள்ளது.
தற்போது, இந்தியாவில் மூன்று தடுப்பூசி நிறுவனங்களின் தடுப்பூசிகள் மனித பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதில்,, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கிறது. இது மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளாது. அதுபோல, புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் இந்தியாவில் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களின் தடுப்பூசிகளின் 3வது கட்ட ஆய்வு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதில் நல்ல முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும், 2021 ஜூலைக்குள் 25கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கடந்தமாதம் தெரிவித்திருந்தார். அதையடுத்து, முதல்கட்டமாக, கொரோனா தடுப்பூசி யார் யாருக்கு போடப்பட வேண்டும் என்பது குறிதுது, திட்டங்களை வகுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனகாரணமாக, தடுப்பூசி யார் யாருக்கு முதல்கட்டமாக போடப்பட வேண்டும் என்பது கோவிட் -19 க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு வரைந்த அமலாக்கத் திட்டத்தின் வரைவு மத்திய முகவர் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநிலங்கள், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தடுப்பூசி போடப்பட வேண்டியவர்களி,ன, முன்னுரிமை பட்டியல் தயாரித்து உள்ளன. அதன்படி, முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் மற்றும், முதியோர், கர்ப்பிணிகள் என தடுப்பூசி போட வேண்டியவர்கள் குறித்த பட்டியல்களை மத்தியஅரசுக்கு அனுப்பி உள்ளன.
இந்த பட்டியலை, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தலைமையிலான மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான குழு, சிடிசி, அட்லாண்டா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியோரால் ஆரம்ப கட்ட தடுப்பூசிகளுக்கான ஒதுக்கீட்டை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில்,மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான கோவிட் -19 குறித்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த திட்டம் முதல் கட்டத்தில் 23% க்கும் அதிகமான மக்களை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரைவுத் திட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் துறையிலிருந்து 70 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என வல்லுநர்கள் குழு மதிப்பிட்டுள்ளது.
இந்த 70 லட்சம் சுகாதார பணியாளர்களில், 11 லட்சம் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் மற்றும் 8 லட்சம் ஆயுஷ் பயிற்சியாளர்கள் அடங்குவர். மேலும், 15 லட்சம் செவிலியர்கள், 7 லட்சம் துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம் – Auxiliary nurse midwife) மற்றும் 10 லட்சம் ஆஷா தொழிலாளர்களும் அடக்கம்.
இந்த பட்டியலில் மேலும், 7 முதல் 8 லட்சம் சுகாதார வல்லுநர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு பணியில் உள்ளவர்களும் அடங்குவர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், நவம்பர் தொடக்கத்தில் இறுதி பட்டியல் தயாராக இருக்கும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வரைவுதிட்ட பட்டியலில், மத்திய மற்றும் மாநில அளவில் 45 லட்சம் காவல்துறையினர் மற்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்புடைய படைகள் மற்றும் வீட்டுக் காவலர்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர் உட்பட 2 கோடிக்கு மேற்பட்ட முன்னணி தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட உள்ளனர்.
இது தவிர, பொது போக்குவரத்து ஓட்டுநர்கள், துப்புரவாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள 1.5 கோடி நகராட்சி ஊழியர்கள் மற்றும் முன்னணி குழுக்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான உயர்மட்ட குழு, தடுப்பூசி தொடர்பான முழு செயல்முறைகளையும் வகுத்து வருகிறது. மேலும், நாட்டில் பல்வேறு தடுப்பூசிகள் கிடைப்பதற்கான காலக்கெடுவை புரிந்து கொள்ளுதல், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகபட்ச அளவு தடுப்பூசிகள் கிடைக்கச்செய்வதற்கான உறுதிப்பாட்டை பெறுதல், சரக்கு மற்றும் வினியோக மேலாண்மையை கவனித்தல், அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றில் இந்த குழு செயல்பட்டு வருகிறது.