ஹரிதுவார்:
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம்.

கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றிலும் இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த மருந்தைக் கரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் ஐந்து முதல் பதினான்கு நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருந்து இன்று முதல் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரித்துவாரில் நடந்த இதன் அறிமுக விழாவில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “கொரோனா வைரஸை எதிர்க்கும் முதல் ஆயுர்வேத மருந்தினை தகுந்த ஆராய்ச்சி, சான்றுகள் மற்றும் சோதனை அடிப்படையில் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்களது ஆய்வின்படி, மூன்று நாட்களில் 69% நோயாளிகள் இந்த மருந்தால் குணமடைந்தனர். ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.