சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள தெருக்களின் எணிக்கை 158 ஆக அதிகரித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
அதிகப்பட்சமாக சென்னை ராயபுரத்தில் 50 தெருக்களும், அண்ணாநகரில் 43 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,027 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தெருக்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ளவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தெருக்கள் மூடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராயபுரம் மண்டலத்தில் 40 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 43 தெருக்கள் உள்பட மொத்தம் 158 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்கள் விவரம்