திருவனந்தபுரம் : அடுத்த மாதம் (அக்டோபர்) கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்று முதன்முதலாக ஆரம்பித்தது கேரளாவில்தான். ஆனால், அங்கு மத்திய மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வெளிநாடு களில் இருந்து ஏராளமானோர் தாயகம் திரும்பியதால், கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது.
அங்கு, இதுவரை 79,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ள நிலையில், மாநிலத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓணம் பண்டிகையை கொண்டாட ஏராளமானோர் கேரளா வந்துள்ளனர்.
இதன் காரணமாக, அடுத்த இரண்டு வாரங்களில் மாநிலத்தில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் நோய் தொற்று உச்சத்தை எட்ட வாய்ப்புள்ள என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel