டெல்லி: இந்தியாவின் கொரோன தொற்றை தடுக்கும், முதல் கோவாக்சின் தடுப்பூசி, 2020 இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது பல நிறுவனங்கள் மனிதர்களுக்கு சோதகைளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், .முதல் கொரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’ இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்திய நிறுவனங்கள் தயாரித்து வரும் தடுப்பூசிகளின் செயல்திறன், சோதனைகள் முடிந்ததும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலாவைச் சேர்ந்த மற்ற இரு தடுப்பூசிகள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் கூடுதல் ஒரு மாதமாவது தேவைப்படும் மற்றும் சந்தையில் ஒரே கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தவிர, ஜைடஸ் காடிலா ’ஜைகோவ்-டி தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி நாடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.