சென்னை: கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்காளால் முடியாது; இலவசம் என்று கூறுவதே முதலில் தவறு என மூத்த வழக்கறிஞரும்,  திமுக எம்.பியுமான வில்சன் தெரிவித்து உள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுகின்றன. இந்த இலவசங்களால், மக்கள் சோம்பேறி களாக்கப்படுவதுடன், மாநிலத்தின் நிதி நிலமையும் கேள்விக்குறியாகி வருகிறது. இதனால், இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தலைமைநீதிபதி என்.வி.ரமணா, திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து வழக்கு  தற்போது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் , உச்ச நீதி மன்றம் இன்று தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது குறித்த வழக்கை நிராகரித்து, விரிவான விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றவர்,  இதனை முதலில் இலவசம் என்பதே தவறு. மக்கள் நலனுக்காக, தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, அந்த நேரத்தில் மக்கள் கொடுக்கும் வாக்குகளை கொண்டு வெற்றி பெற்ற பின், சட்டமன்றத்தில் வைத்து அவை மக்களுக்கு திட்டங்களாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விஷயங்கள் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வராது, ஆர்ட்டிகல் 37 படி நீதிமன்றங்கள் இதற்கு நேரடியாக தடை விதிக்க முடியாது. அதுபோல ஒரு அரசியல் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை  தடை செய்யவோ அல்லது குழு ஆலோசனைக்கு உட்படுத்தவோ நீதிமன்றங்காளால் முடியாது.

இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு எடுத்து விசாரிக்க, விவாதத்திற்கு தலைமை நீதிபதி அமர்வின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, அரசின் மற்ற விஷயங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்த வழக்கில் திமுக தக்க நேரத்தில் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு, மக்கள் நலனுக்காக தான் இந்த வாக்குறுதிகள் கொண்டு வரப்பட்டது, நீதிமன்றங்கள் இதில்
தலையிட கூடாது என கூறியதால் நீதிமன்றம் தடை விதிக்காமல் விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்றார்.

உச்சநீதிமன்ற நேரலை வழக்கு விசாரணை ஒலிபரப்பு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்றும் அனைவருக்கும் உரிமையுண்டு என்றும் அவர் தெரிவித்தார்.