அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் செல்வா என்பவர் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்றும், ‘பிகில்’ படப்பிடிப்பிற்கு தடை உத்தரவு வழங்க கோரியும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் ‘பிகில்’ படப்பிடிப்பிற்கு தடை விதிக்க முடியாது என கூறி இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.