சென்னை

பாநாயகர் அப்பாவு மேல் அதிமுக தொடர்ந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். எனவே இத்உ குறித்து சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார்.

சபாநாயகர் மீது வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்ததல், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை பாபு முருகவேல் தொடர்ந்தார். இன்ரு இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பாவு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சம்மன் தங்களுக்கு வரவில்லை என்றும், வந்திருந்தால் கண்டிப்பாக அப்பாவு ஆஜராகி இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் கூறும் தேதியில் அப்பாவு ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்து அன்றுஅப்பாவு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.