ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையில் ஊழியர்களாக வேலை பார்த்துவந்த கோட்டைசாமியும், பூசைத்துரையும், ஊரடங்கில் கள்ளத்தனமாக மது விற்றுள்ளனர்.

7 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை ’டாஸ்மாக்’ கடையில் இருந்து திருடி விற்றபோது அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 55 ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் இருவரும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்க இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்த ஆணையிட்டு, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது, உயர்நீதிமன்றம்.

’டாஸ்மாக்’ கடையில் இருந்து திருடிய மதுப்பாட்டில்களின் எஞ்சிய தொகையான ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை இரண்டு ’சேல்ஸ்மேன்’களும் இரு  வாரங்களில் டாஸ்மாக் நிறுவனத்தில் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

– பா.பாரதி