சென்னை: சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். மேலும், அவரை பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு தள்ளிவைக்கப்படுவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல் வழக்கில் ஜாமின் கிடைக்காததால், அவர்  புழல் சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.