நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகளும், நாங்குநேரியில் 66% வாக்குகளும் பதிவாகின. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே தொடர்ந்து பதற்றமான நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு இரு தொகுதிகளிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்ன முறையே பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதன் முடிவுகள் பிற்பகலில் வெளியாகும் என்பதால், கொண்டாட்டத்திற்கு இரு கட்சிகளும் தயாராகவே உள்ளன.