சென்னை

ந்த மாதம் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல்களின் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட் உள்ளன. திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் எண்ணிக்கை மைய முகவர்களும், மாவட்ட செயலர்களும் வேட்பாளர்களும் ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையின் போதும் மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் மக்கள் திமுக கூட்டணிக்கு அளித்துள்ள வெற்றி தீர்ப்பை உறுதி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு எண்ணிக்கை மைய முகவர்கள் தோளில் உள்ளது எனவும் ஆறுவடை நேரத்தில் அசதி வந்தால் நொடிப்பொழுதில் அதை களவாட அதிகார வர்க்கத்தினர் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]