கவுண்டவுன் தொடங்கியது: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது…

Must read

ஸ்ரீஹரிகோட்டா:  ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கோளான EOS – 3 நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை 03.43மணிக்கு தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இரண்டாவது ஏவுதளத்தில் இந்த செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ தயாராகி வருகிறது. இந்த ஜிஎஸ்எல்சி எஃப்10 ராக்ட் மூலம் ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் விண்ணுக்க செல்கிறது.

தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14 வது ராக்கெட்டாகும். இதில்  2,268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த செயற்கைக்கோள் பூமியை கணிப்பதில் துல்லியமானது என்பதால் வானில் இருக்கக்கூடிய கண் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயற்கை கோள்மூலம், பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை மற்றும் னி மற்றும் பனிப்பாறைகள் பற்றி ஆய்வு செய்ய முடியும். ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படும் ‘ஈ.ஓ.எஸ்.-03’  பூமி கண்காணிப்பு செயற்கை கோள், பூமியின் மேல்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். GSLV ரகத்தின் உள்ள ராக்கெட்டின் மூலமாக செலுத்தப்பட உள்ள 14ஆவது செயற்கைக்கோள்  இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோளில் முதல்முறையாக வெப்பத்தில் இருந்து செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article