சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்குப் புகார் கடிதங்கள் வந்தன. துணைவேந்தராக உள்ள சூரப்பா, தனது மகளுக்கு விதியை மீறி பதவி அளித்ததாகவும், மேலும் பல்வேறு பணி நியமங்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவர்மீது, சுமார் 280 கோடி ரூபாய் முறைகேடு உள்ளதாகவும், இதுகுறித்து, விசாரணை செய்வதற்காக, தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அவருடைய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், பதிவாளர் இதுவரை ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. எனவே அவரை நேரில் முன்னிலையாகும்படி விசாரணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அதனடிப்படையில் அவர் விரைவில் ஆவணங்களை விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகக் தெரிவித்து உள்ளதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.