டெல்லி: தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என உறுதி கூறியுள்ளார். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும், அதாவது வறுமைக்கு எதிரான போரில் ஏழைகள் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்றும் நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது எனவும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்க தொடங்கியதில் இருந்து சாதகமான பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் சில தாக்கங்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவை. ”விரைவில் இந்தியா உலகின் சிறந்த 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளும் வகையில், வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு இன்று பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பசித்த 100 கோடி வயிறுகளைக் கொண்ட நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியாவில் தற்போது, 100 கோடி உத்வேக மனங்களும் 200 கோடி திறன்வாய்ந்த கைகளும் இருக்கின்றன. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட பசித்த வயிறுகளைக் கொண்ட நாடு என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 100 கோடி லட்சிய மனங்களையும், 200 கோடிக்கு மேற்பட்ட திறமையான கைகளையும், கோடிக்கணக்கான இளைஞர்களையும் கொண்ட நாடு என்று பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வந்தது.
காலனி ஆதிக்கத்தால் இந்தியாவின் உலகளாவிய தாக்கம் குறைந்தது. தற்போது இந்தியா மீண்டும் எழுந்து வருகிறது. 10 ஆண்டுக்குள் ஒரே தாவலில் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள். 2047-ம் ஆண்டு வரையிலான காலம், மாபெரும் வாய்ப்புகளுக்கான காலம். இந்த சகாப்தத்தில் வாழும் இந்தியர்கள், வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 ஆண்டாக இந்தியாவில் நிலையற்ற அரசுகளே இருந்தன. எனவே அவற்றால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த 9 ஆண்டாக மக்கள் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். அந்த நிலைத்தன்மை காரணமாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
நம்மிடம் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்மைத்துவம் (democracy, demography and diversity) ஆகிய மூன்று ‘D’க்கள் இருக்கின்றன. நான்காவதாக, வளர்ச்சியை (development) சேர்த்திருக்கிறோம். பொறுப்பற்ற நிதிக் கொள்கைகளால், ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்”.
இந்தியாவின் விண்வெளி சாதனையை உலகமே கொண்டாடுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் முந்தைய சாதனைகளை இந்தியா முறியடித்து வருகிறது.
இந்திய பல்கலைக்கழகங்கள், உலக தரவரிசையில் முன்னேறி வருகின்றன. இந்த வேகத்தால், மிக விரைவில் பொருளாதாரத்தில் 3-வது இடத்தை இந்தியா எட்டும்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறும். வளர்ந்த நாடாக, சுகாதாரம், கல்வி, சமூக துறைகளின் வெளிப்பாடு, உலகிலேயே சிறந்ததாக இருக்கும். நமது தேசிய வாழ்க்கையில் ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமே இருக்காது. இந்திய மக்களின் வாழ்க்கை தரம், உலகின் சிறந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும்.
நம்மிடம் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்மைத்துவம் (democracy, demography and diversity) ஆகிய மூன்று ‘D’க்கள் இருக்கின்றன. நான்காவதாக, வளர்ச்சியை (development) சேர்த்திருக்கிறோம். பொறுப்பற்ற நிதிக் கொள்கைகளால், ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்”.
தீவிரவாதிகள் டார்க் நெட், மெட்டே வெர்ஸ், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைத் தங்களின் தீய நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவை நாடுகளின் சமூக கட்டமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். சைபர் அச்சுற்றுத்தல்களை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இணைய பயங்கரவாதம், ஆன்லைன் தீவிரமயமாக்கல், பணமோசடி ஆகியவை இதன் உதாரணங்கள் ஆகும். இணையதள குற்றங்களை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை.
பணவீக்கம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதுதொடர்பாக ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினோம். ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது.
சூரியசக்தி கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, ஜி20 நாடுகளிடையே உயிரி எரிபொருள் கூட்டணி அமைப்பது அவசியம். ஆப்பிரிக்காவுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.
ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க இந்தியா குரல் கொடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். அதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும் வளரும் நாடுகளுக்கு கடன் பிரச்சினை பெரும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். எனவே, ஜி20 நாடுகள் மாநாட்டில், ஏழை நாடுகள் கடன் சுமையில் இருந்து விடுபட உதவுவதற்கு வழி காணப்படும். அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது உதவினோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த அணுகுமுறை, 21ஆம் நூற்றாண்டுக்குப் போதுமானதாக அமையாது என்றும் தெரிவித்தார்.