சென்னை: தமிழக அமைச்சர்களில் 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை குற்றம் சாட்டி உள்ளார்.
சமீபத்தில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட மேலும் பல அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதற்கு பதிலடி கொடுத்து பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விமர்சனம் செய்து வருகிறார். பாஜ., ஆட்சியில் 7.50 லட்சம் கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளது ன கூறி வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விமர்சனம் செய்து தங்கள் மீதான ஊழல் வழக்குகளை திசை திருப்பி வருகின்றனர், தற்போதைய நிலையில், 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், டிரான்ஸ்பார்மர் சப்ளை மோசடி, பிஜிஆர் எரிசக்தி மோசடி, போக்குவரத்து துறையில் மோசடி உள்ளிட்ட 9 ஊழல்கள் சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் படி, 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் அமைச்சர் ஒருவர் சிறையில் உள்ளனர் ஊழல்களை திசை திருப்பவே சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி பேசி வருகிறார். சிஏஜி அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டி பேசுவதை நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.