சென்னை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே விசாரணைக்கு எடுத்துள்ள, முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் இன்று முதல் இறுதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் இன்நாள் அமைச்சர்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்குகளை மீண்டும் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்து, விசாரணைக்கு எடுத்தார். அதன்படி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , வளர்மதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.
இதை எதிர்த்து பலர், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்றுமுதல் நடைபெறும் என நீதிபதி ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, இந்த வழக்குகள் இன்று (பிப்ரவரி 5-ம் தேதி) முதல் தினமும் நடைபெறும் என்றும் பிற வழக்கு விசாரணை பாதிக்காத வகையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்குகள் இன்று முதல் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்களின் வழக்குகளில் விசாரணை நடைபெற உள்ளது.
அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்த நீதிபதி திடீர் மாற்றம்!